தனது சொந்த காசில் வகுப்பறைக்கு மாணவர்கள் பெயிண்ட் அடித்த சம்பவம் அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆசிரியரை மிரட்டுவது, வகுப்பறையில் நடனமாடுவது, மேசைகளை உடைப்பது, அடிதடியில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் பெரும் கண்டனத்தை எழுப்பியிருந்தது நிலையில் திருச்சி லால்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்த சம்பவம் அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது. இந்த பள்ளியின் தலைமை […]
