பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வலையங்குளம் பகுதியில் முத்துமுனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொத்து தகராறில் தனது தந்தையை கொலை செய்த குற்றத்திற்காக முத்துமுனியாண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இதனையடுத்து முத்துமுனியாண்டி ஜாமினில் வெளிவந்தார். அவர் வெளியே வந்து சில நாட்களில் மர்ம நபர்கள் முத்துமுனியாண்டியை வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த பெருங்குடி காவல்துறையினர் […]
