தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மருத்துவ கவுன்சில் நேற்று ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. முதல் நாள் கவுன்சிலிங்கிற்க்கு 761 பேர் வந்தனர் அதில் 541 பேருக்கு மருத்துவ படிப்பிற்கான ஆணை வழங்கப்பட்டது. அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார். அதில் அவர் கூறியதாவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னும் கவுன்சிலிங் நடைபெற உள்ளது. […]
