தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பெப்சி அமைப்பகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் மே 31-ஆம் தேதி வரை படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாது என்று பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி அறிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கும் போது அனைத்து திரை பிரபலங்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே படப்பிடிப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள் […]
