தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண் வேட்பாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை பகுதியில் உள்ள காந்திநகரில் மூர்த்தி, அனுசியா தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். அனுசியா அய்யம்பேட்டையில் உள்ள பேரூர் பகுதியில் தி.மு.க துணைச் செயலாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அனுசியா நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9 வது வார்டில் தி.மு.க சார்பில் வேட்பாளராக போட்டியிட்டிருந்தார். இந்த தொகுதியில் இவருடன் சேர்த்து 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர் தேர்தலில் […]
