இந்தியாவில் 1992ம் ஆண்டு குறுகிய சேவை ஆணையத்தின் மூலம் மருத்துவத்துறை அல்லாத துறைகளில் பணியாற்றுவதற்காக இந்திய ராணுவத்தில் முதல் முதலாக பெண்கள் பணியமர்த்தப்பட்டனர். அதன் பிறகு இந்த நாட்டின் பெண்களுக்கு இந்தியாவின் பாதுகாப்புத்துறையில் சரியான இடத்தைக் கொடுப்பதற்கான உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு 30 ஆண்டுகாலம் பிடித்திருக்கிறது. போரில் பங்கேற்பது உள்ளிட்ட ராணுவத்தின் எந்த ஒரு பிரிவின் பணியிலும் சேருவதற்கு பெண்களுக்கு இடம் அளிக்க கூடிய வகையில், தொடர்ந்து இந்திய ராணுவத்தில் நிரந்தர ஆணையத்தையும், தேசிய பாதுகாப்பு அகாதாமியின் […]
