கடலூர் மாவட்ட காட்டுமன்னார்கோவில் கீழ்கொள்ளிடம் வீராணம் டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. அதில் சரவணன்(50) என்பவர் தலைவராக இருந்து வருகிறார். இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வீராணம் டெல்டா விவசாயிகள் ஒருங்கிணைந்து “வீராணம் டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்” என்ற பெயரில் விளைபொருட்களை வாங்கி வணிகம் செய்து வருகிறோம். அதன்படி சுற்றியுள்ள விவசாயிகளிடம் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 10, […]
