தற்கொலைக்கு முயன்ற பெண் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவத்திபாளையம் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராதா நேற்று காலை அப்பகுதியில் இருக்கும் ஆற்றுப்பாலத்தின் நடுப்பகுதியில் இருக்கும் சுவரில் ஏறி தண்ணீரில் குதித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் […]
