அதிக மாத்திரைகளைத் தின்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஒருவர் நேற்று அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்றதால் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அந்த இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உயர் அதிகாரியின் பணி நெருக்கடி மற்றும் கடுமையான நடவடிக்கையால் மன […]
