தண்டவாளம் அருகே ஒரு பெண் பிணமாக கடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே கணவாய் புதூர் பகுதியில் சென்னை-சேலம் இடையேயான ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளத்தின் அருகே 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஓமலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
