தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கங்கப்பாளையம் பகுதியில் சின்னபையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 27-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயலட்சுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதற்கிடையில் வயல்வெளியில் ரத்த காயங்களுடன் 2 காதுகளும் அறுக்கப்பட்ட நிலையில் ஜெயலக்ஷ்மி மயங்கி கிடந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த […]
