பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் சோனியா நகர் பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் மாஸ்டராக உள்ளார். இவர் பொன்மணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சிவசங்கர் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சிவசங்கர் ஒரு பெண்ணிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை பொன்மணி கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இருவருக்கும் […]
