பொருளாதார நெருக்கடி காரணமாக பெண் குழந்தைகள் முதியவர்களுக்கு விற்கப்படும் அவலநிலை ஆப்கானில் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்பு அந்நாடு முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றது. மேலும் ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த பொருளாதார உதவிகள் அனைத்தையும் உலக நாடுகள் நிறுத்திக் கொண்டன. இதனால் ஆப்கானில் தற்பொழுது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தலீபான்களின் ஆட்சிக்கு பயந்து மக்கள் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாத […]
