வந்தே மாதரம் என்ற பாடலை இயற்றிய பன்கிம் சந்திர சேட்டர்ஜியின் பிறந்த தினமான இன்று அவரை நினைவு கூர்ந்த நடிகை கஸ்தூரி, வந்தே மாதரம் பாடலில் இருந்து தான் தன்னுடைய பெண் குழந்தைக்கு பெயரிட்டதாகவும் கூறினார். ஆனால் அவரது பெண் குழந்தையின் பெயரை பதிவிடுவதற்கு பயப்படுவதாக தெரிவித்த அவர், நாட்டின் நிலைமை தற்போது அப்படி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
