காவல் நிலையத்தில் பெண் காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் காவல் நிலையத்தின் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்றுள்ளனர். இதனை பார்த்த உயரதிகாரிகள் பணியில் இருந்த பெண் காவலரை அழைத்து கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் காவலர் தண்ணீரில் பூச்சிமருந்து கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த சக அதிகாரிகள் அந்த தண்ணீரை தட்டிவிட்டு பெண் காவலரை காப்பாற்றியுள்ளனர். […]
