உக்ரேனில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 19 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. மேலும் உக்ரைனின் பல நகரங்களை ரஷ்ய படையினர் நெருங்கி வருவதோடு தலைநகரான கிவ்வை கைப்பற்ற ஆர்வம் காட்டி வருகின்றது. அதேவேளை மரியுபோல் நகரிலும் ரஷ்யா தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது. […]
