தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹனம்கொண்டாவில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் பெண் ஊழியர்கள் சிலர் மது பாட்டிலோடு பிறந்தநாள் கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டது. இந்த வீடியோ தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது. மேலும் இந்த வீடியோ மருத்துவமனையில் இருந்த நோயாளியின் உறவினரால் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இருப்பினும் இந்த குற்றச்சாட்டை அவர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது போன்ற செயல்கள் மீண்டும் நடந்தால் பணியில் […]
