சத்தீஸ்கரில் சம்பள பாக்கி கேட்டு வந்த டிரைவரை சக பெண் ஊழியர்கள் சேர்ந்து அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த ராகுல் டிராவல்ஸ் என்னும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் கார் டிரைவராக தினேஷ் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த மே மற்றும் ஜூன் மாதத்திற்கான சம்பளத்தை அந்த நிறுவனம் வழங்கவில்லை. இந்த சூழலில் ராய்ப்பூர் விமான நிலையம் அருகே அமைந்திருக்கின்ற அந்த டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சென்ற தினேஷ் அங்கு பணியில் […]
