இந்திய ராணுவத்தின் தகவல்களை பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவாளிக்கு பகிர்ந்ததால் ராணுவ காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராணுவப் பிரிவில் தற்போது பணியாற்றி வருகிறார். பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கு சமூக வலைதளங்கள் மூலம் ராணுவ ரகசிய தகவல்களை பரிமாற்றம் செய்ததாக தகவல் வெளியானது. இது குறித்து கடந்த சில நாட்களாக பிரதீப்குமார் காவல்துறை கண்காணித்து வந்துள்ளனர். […]
