ஆற்றில் படகு கவிழ்ந்து பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் கரையோரம் இருக்கும் நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். அவரின் மனைவி காந்திமதி, மகன் ராசுகுட்டி. இவர்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றார்கள். இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதற்கு முன்பே நாதல்படுகை கிராமத்திற்கு கணேஷ் வந்துவிட்டார் ஆனால் காந்திமதி மற்றும் ராசுகுட்டி உள்ளிட்டோர் மட்டும் திட்டு பகுதியில் ஆடுகளை பாதுகாத்துக் கொண்டு அங்கேயே தங்கியிருந்தார்கள். இந்நிலையில் நேற்று தண்ணீரின் வரத்து அதிகரித்ததால் அவர்கள் […]
