சென்னையிலிருந்து கடத்தி வந்த 13 1/2 கிலோ கஞ்சாவை மார்த்தாண்டம் காவல்துறையினர் பறிமுதல் செய்து, பெண் உட்பட 2 பேரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதை தடுப்பதற்கு குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்படி காவல்துறையினர் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்கு தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். அதன்படி மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். […]
