ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை பகுதியில் இருக்கும் ஏரியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் நேற்று இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட போது பெண்ணின் உடலுக்கு அருகே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் காலியாக இருந்துள்ளது. மேலும் அருகே கிடந்த மணி பரிசில் சேலம் […]
