வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் பகுதியில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் சுப்பிரமணி கடந்த 7 ஆண்டுகள் முன்பு உயிரிழந்த நிலையில் இவர் தனது மகள் ஹேமாவதியுடன் தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துலட்சுமி தனது மகளுடன் உறவினர் வீட்டு விஷேசத்திற்காக தேவம்பாளையத்திற்கு சென்றார். இதனையடுத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த […]
