உடல்நலக்குறைவால் பயிர் காப்பீட்டு திட்ட உதவி இயக்குனர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள கைலாசம்பாளையம் பகுதியில் வசுமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வசுமதி திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர்கள் வசுமதியை நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு […]
