உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அருகே இருக்கும் மலைப்பகுதியில் உள்ள பாஸ்மார்பெண்டா என்ற மலை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் முதல் மனைவி வள்ளியம்மாள். இவர் 20 வருடங்களுக்கு முன்பாக தனது கணவரை விட்டு பிரிந்து அதே கிராமத்தில் தனது இளைய மகனுடன் வசித்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மாலையில் ஓட்டிக் கொண்டு வந்து […]
