ருமேனியாவில் கரடிகள் செல்வதை கவனிக்காமல் அவற்றின் பின் சென்ற பெண்ணை கரடிகள் விரட்டி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பகுதியிலிருக்கும் சினையா என்னுமிடத்தில் இருக்கும் வனப்பகுதிக்கு அருகில் இரவில் ஒரு வீட்டின் வழியே 2 கரடிகள் சென்று கொண்டிருந்தது. இதனை கவனிக்காமல், அந்த வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் அவற்றிற்கு பின்னால் சென்றுவிட்டார். அதன்பின்பு, கரடிகளை பார்த்த அவர், பதறியடித்துக்கொண்டு ஓடி வந்து தன் வீட்டின் கதவை வேகமாக அடைத்துவிட்டார். அந்த பெண் கதவை அடைத்த, […]
