கிரிக்கெட் பேட்டால் பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே இருக்கும் கல்லல் மங்கம்மா சாலை இந்திரா நகரை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மனைவி தேவிகா. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகின்றார். முருகானந்தத்திற்கும் அவரது அண்ணன் குமாரவேலுக்கும் முன் விரோதம் இருக்கின்றது. இந்த நிலையில் குமாரவேலு வளர்க்கும் கோழிகள் முருகானந்தம் வீட்டிற்குள் சென்று அசுத்தம் செய்ததாக சொல்லப்படுகின்றது. இதனால் தேவிகா குமாரவேலுவிடம் கேட்ட பொழுது அவர் ஆத்திரமடைந்து […]
