பெண்ணை தாக்கிய தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குப்பாச்சிப்பட்டி பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி(33) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கோமதியின் குடும்பத்தினருக்கும், அதே பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று விஜயகுமாரின் மனைவியான கனகவள்ளி என்பவர் கோமதியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து கோமதி தட்டிக் கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த விஜயகுமாரும் அவரது மனைவியும் இணைந்து கோமதியை அடித்து கொலை மிரட்டல் […]
