முன் விரோத காரணமாக பெண்ணை தாக்கிய தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாணதிரையான் பட்டினம் பகுதியில் கூலித் தொழிலாளியான கார்த்திகேயன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வினோதா என்ற மனைவி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகேயனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிதம்பர பாரதிதாசன் என்பவருக்கும் இடையே நிலப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கார்த்திகேயனுக்கு பாரதிதாசனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் பாரதிதாசன் […]
