டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் குரு கிராம் அருகே IFFCO சவுக் அருகே ஒரு மர்மமான சூட்கேஸ் கிடந்துள்ளது. இதை பார்த்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் டெல்லி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சூட்கேசை திறந்து பார்த்தபோது நிர்வாணமான நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]
