மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை காவல்துறையினர் பறித்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு எறையூர் பகுதியில் வசிக்கும் பழனியின் மனைவியான ராணி என்ற பெண் கைக்குழந்தையுடன் வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் ராணி கொண்டுவந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ராணி கூறியதாவது, எனது வீட்டுமனையை உறவினர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் […]
