மருத்துவமனைக்கு வந்த பெண்ணிடம் மர்மநபர்கள் பணம் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூட்டப்புளி பகுதியில் ஜனோ ஜோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெஸ்டர் என்ற மனைவி உள்ளார். இவர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார். இதனையடுத்து சிகிச்சை முடிந்ததும் ஜெஸ்டர் தனது ஊருக்கு செல்வதற்காக ஐகிரவுண்டு பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஜெஸ்டர் தனது கையில் வைத்திருந்த பையை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் பணம் […]
