பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் மர்ம நபர்கள் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நடந்து சென்ற கற்பகம் என்ற பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து அந்த பெண் சத்தமிட்டுள்ளார். இதனைப்பார்த்த பொதுமக்கள் தப்பியோட முயன்ற இரண்டு நபர்களையும் மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பின் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் […]
