ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் உப்பிலியர் வீதியில் வசித்து வருபவர் குமார். இவர் மனைவி ரம்யா தேவி (39) கூலித்தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து அதே வீதியில் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார் வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் ரம்யா தேவியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்தார்கள். […]
