உசிலம்பட்டியில் அரங்கேறிய பெண் சிசு கொலையைக்கு முக.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலப்பட்டியில் வறுமையை காரணம் காட்டி 30 நாளான பெண் சிசு கள்ளிபால் கொடுத்து கொல்லப்பட்டதற்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் , பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனையளிக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செக்காணூரணி அருகே புள்ளநேரி கிராமத்தில் இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் […]
