திண்டுக்கல் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் 30க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தங்களுக்கு வேலை மறுக்கப்படுதாகவும், இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். […]
