Categories
உலக செய்திகள்

பெண் இராணுவ அதிகாரிக்கு சிறை….. போராட்டம் நடத்தும் பெண்கள் மீது தாக்குதல்….. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு….!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண் ராணுவ அதிகாரியை தலிபான்கள் கைது செய்து சிறை வைத்த நிலையில், அவரை விடுவிக்க கோரி பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் நான்கு மாதங்களுக்கு முன்பு, மகளிர் சிறை இயக்குனர் அலியா அஸிசி  என்பவரை தலீபான்கள் சிறையில் அடைத்தனர். எனவே, அவரை விடுவிக்க கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், ஹசாரா இனத்தை சேர்ந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை எதிர்த்தும் பெண்கள் போராடி வருகிறார்கள். இந்நிலையில், போராட்டம் நடத்தும் பெண்கள் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உப்பு நீர் கலந்த குடிநீர்…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் புலிவந்தி கிராம ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 20 நாட்களாக இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உப்பு நீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் பெண்கள் காலி குடங்களுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு […]

Categories
உலக செய்திகள்

‘மரணத்தை தழுவுவது மேல்’…. ஆளுநர் வளாகத்திற்கு முன்பாக…. போராடிய ஆப்கான் பெண்கள்….!!

ஆப்கானிஸ்தானில் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்காக பெண்கள் ஆளுநர் வளாகம் முன்பாக போராட்டம் நடத்தினர். ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் ஹெராட் மாகாண ஆளுநர் வளாகம் முன்னால் பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். மேலும் அவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முழக்கமிட்டனர் மேலும் கல்வி, வேலை போன்ற பெண்களின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சீராக வேலைவாய்ப்பு வேண்டும்” பெண்களின் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் ஊரக வேலை திட்ட அடையாள அட்டையுடன் ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் மேல்பாக்கம் பகுதிக்கு தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் சரியான பணி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் எங்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊதியம் வழங்குவதில் முறைகேடு… போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்… ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு…!!

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் ஏராளமான பெண்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேட்டாம்பாடி ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 200க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த திட்டத்தின் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு மாதத்தில் 6 நாள்கள் மட்டுமே பணி வழங்கப்படுவதாகவும், அதற்கான ஊதியம் வழங்குவதிலும் முறைகேடு நடப்பதாகவும் வேலை பார்க்கும் பெண்கள் […]

Categories
உலக செய்திகள்

எந்த உரிமையையும் பறிக்கக்கூடாது…. தாலிபான்களை எதிர்க்கும் ஆப்கான் பெண்கள்…!!!

ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பயத்தில் வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில்  ஆப்கானில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். மக்களுக்கு சேவை செய்வதற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம். எங்களுடைய ஆட்சியில் பெண்களுடைய உரிமை பாதுகாக்கப்படும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஷரியத் சட்டப்படி உரிமைகள் வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான அடக்கு முறையில் நாங்கள் ஈடுபட மாட்டோம் என்று தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் படிப்பு, அரசியல், வேலைகள் என எந்த உரிமைகளையும் பெண்களிடமிருந்து பறிக்கக் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியை உலுக்கிய கூட்டு பாலியல் வன்கொடுமை… கொந்தளித்த பெண்கள்… தொடரும் போராட்டம்…!!!

நாட்டின் தலைநகரில் 9 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்று சுடுகாட்டில் வைத்து எரித்த கொடூரம் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கான்கட் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் சுடுகாட்டுக்கு அருகில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்று குடிநீர் எடுக்கச் சென்றுள்ளார். அவர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை தேடி சென்றுள்ளனர். இரவு ஏழு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்களால நடக்க முடியல… பெண்களின் போராட்டம்… சிவகங்கையில் பரபரப்பு…!!

பெண்கள் இணைந்து யூனியன் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதில் இருக்கும்  யூனியன் அலுவலகத்தில் முன்பு 100 பெண்கள் இணைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வட்டாரம் வளர்ச்சி அலுவலர் லெட்சுமண ராஜ் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் நாங்கள் லட்சுமிபுரம், சங்கம்பட்டி, மணப்பட்டி, கக்கினாம்பட்டி மற்றும் கோனார் பட்டியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இவ்ளோ நாள் நாங்க நிம்மதியா இருந்தோம்… வெளிய வந்த உடனே வேலைய ஆரம்பிச்சிட்டான்…. ரவுடியை எதிர்த்து பெண்கள் போராட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் பிரபல ரவுடி பெண்களை கேலி செய்ததால் ஆத்திரமடைந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னம்மாபேட்டை பகுதியில் அப்சல் என்பவர் வசித்து வருகிறார். பிரபல ரவுடியான இவர் மீது நூற்றுக்கணக்கில் வழக்குகள் உள்ளது. இந்நிலையில் ஒரு வழக்கில் காவல்துறையினர் அப்சலை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து ஜாமீனில் வெளியே வந்த அப்சல் பொன்னம்மாபேட்டையிலுள்ள திப்பு நகர் பகுதியில் மது அருந்து விட்டு பெண்களைப் பார்த்து கிண்டல் செய்துள்ளார். இதனால் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

2 வருசமா பொறுத்தாச்சு இனி முடியாது..! காலிகுடங்களுடன் பெண்கள் போராட்டம்… நாகையில் பரபரப்பு..!!

நாகையில் குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள காடம்பாடி மாரியம்மன் கோவில் தெரு, என்.ஜி.ஓ. காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக இந்த பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் சரிவர கிடைக்கவில்லை. இதுகுறித்து கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மதுபான கடையை திறப்பதற்கு எதிர்ப்பு…. 50க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்..!!

ஈரோடு கோபிசெட்டிபாளையம் பகுதியில் அரசு மதுபான கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் பகுதிக்கு அருகில் உள்ள சிங்கிரி பாளையத்தில் நூற்றுக்கும் மேலான வீடுகளில் 500க்கும் மேலான மக்கள் வசித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஊருக்குள் செல்கின்ற முக்கிய சாலையின் வழியே அரசு மதுபானக்கடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கூறி அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேலான பெண்கள் கடையை […]

Categories

Tech |