பெண்களுக்கு நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 181 இலவச தொலைபேசி எண்ணை காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் அறிமுகப்படுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏ.கே.டி.பள்ளி கூட்ட அரங்கத்தில் காவல் துறை சார்பாக பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கும் விதத்தில் 181 இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தலைமை வகித்துள்ளார். அதன்பின் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 181 என்ற எண்ணை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். […]
