தமிழக காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கை தடுப்பு விழிப்புணர்வு வாகனம் முதற்கட்டமாக கோவைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகள் மற்றும் பெண்கள் வேலை பார்க்கும் இடங்களில் பாலியல் தொல்லை மற்றும் குற்ற சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்ட இந்த விழிப்புணர்வு வாகனத்தில் நான்கு புறங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பெரிய அளவிலான திரை மூலம் பெண்கள் […]
