லண்டனில் பாராளுமன்றத்திற்கு அருகில் மக்கள் பலர் திரண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் சாரா எவரார்ட் என்ற இளம்பெண் காவல்துறை அதிகாரி ஒருவரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அஞ்சலி செலுத்தும் கூட்டத்தினை காவல்துறையினர் கையாண்ட விதத்தை கண்டித்து பதாகைகள் ஏந்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பாராளுமன்ற வளாகத்தின் அருகில் சுமார் 5 மணி அளவில் பெரும்பாலான மக்கள் கூட்டமாக திரண்டனர். மேலும் காவல்துறையினரின் முன்பே அவர்களுக்கு எதிரான […]
