கோவில் விழாவில் பெண்களிடம் நகை பறித்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள இரும்பேடு ஊராட்சி ஏ.சி.எஸ். நகரில் புதிதாக வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அங்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பாக சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் லட்டு பிரசாதம், அன்ன பிரசாதம் ஆகியவற்றை வழங்கும் போது அதிகளவில் குவிந்துள்ளனர். அதனை பயன்படுத்தி பல பெண்களிடம் கூட்டத்திற்குள் புகுந்து அவர்கள் அணிந்திருந்த நகைகளை […]
