இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பால், உணவு பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இதனை சமாளிக்க முடியாத மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நம் அனைவராலும் மறக்க முடியாது என்பதுதான் உண்மை. இந்நிலையில் அந்நாட்டில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. […]
