இந்தியாவில் கடந்த 5 வருடங்களில் மட்டும் சுமார் 10 கோடி பெட்ரோல் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சென்ற 2017-2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி வரையிலும் 1,42,12,385 டீசல் வாகனங்களும், 10,44,28,407 பெட்ரோல் வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை தெரிவித்து இருக்கிறது. அதே நேரம் வருகிற காலங்களில் மேலும் வாகன போக்குவரத்து பெருகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
