இந்தியாவில் தற்போது நிறைய பேர் தங்களது சொந்த வாகனங்களை வீட்டில் விட்டுவிட்டு பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணிக்கின்றனர். அலுவலகத்திற்கு, கல்லூரிக்கு செல்பவர்கள் கார் மற்றும் பைக் பெட்ரோல் டீசலுக்கு ஆகவே நிறைய செலவிட வேண்டியுள்ளது. காரணம் என்னவென்றால் இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. அனைத்து நகரங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. இது பொதுமக்களின் பிரச்சனையாக மட்டும் அல்லாமல் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்சினையாக தற்போது மாறிவிட்டது. […]
