பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடி பகுதியில் மோகனராம் என்பவர் வசித்து வருகிறார். ஆச்சிமடம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் காசாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பெட்ரோல் பங்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்தாலங்குறிச்சி பகுதியில் வசிக்கும் கணேசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர். அவர்கள் செல்போன் செயலி மூலம் ரூ.500 அனுப்புவதாகவும் அதில் ரூ.200 க்கு பெட்ரோலும் மீதி ரூ.300 ரூபாயை பணமாக […]
