அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தினந்தோறும் பெட்ரோல் , டீசல், மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் காசிநாதன் துரை தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து தாலுகா செயலாளர் முனியசாமி, தர்மலிங்கம், […]
