கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு புதிய அவதாரத்தை எடுத்து வருகிறது. பெங்களூருவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது 20 ஆயிரமாக இருக்கிறது. இதனால் பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநகராட்சி, சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் பாதிப்பு எண்ணிக்கை தினசரி உயர்ந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக பெங்களூருவில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு 144 தடை உத்தரவானது அமல்படுத்தப்பட்டது. […]
