பெங்களூரில் இருந்து காரைக்காலுக்கும், காரைக்காலில் இருந்து பெங்களூருக்கும் ரயில் இயக்கப்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த ரயில் இயக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் இந்த ரயில் இயக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை பெங்களூரில் இருந்து புறப்பட்டு சேலம் டவுன் ரயில் நிலையத்துக்கு வந்த இந்த ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு ராகுல் ஸ்போர்ட்ஸ் மற்றும் இளைஞர் நல விளையாட்டு மேம்பாடு அமைப்பின் தேசிய தலைவர் மு விஜய லட்சுமன் தலைமை […]
