திருப்புவனத்தில் காவல்துறையினர், ஆசிரியர்கள், 60 வயதிற்கு மேற்பட்டோர் என 70 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனத்தில் தடுப்பூசி போடும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியானது கொந்தகையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பூவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் போடப்படுகிறது. மேலும் நடமாடும் மருத்துவ வாகனம் மூலமும், திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் […]
