காரைக்குடியில் பூர்வீக வீட்டை இழந்த வருத்தத்தில் முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு அதே பகுதியில் 2-வது வீதியில் பூர்வீக வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் கோவிந்தராஜும் அவரது சகோதரர்களும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் அந்த வீட்டை அவர்கள் விற்றுள்ளனர். அந்த பூர்வீக வீட்டை கோவிந்தராஜ் வாங்க முயற்சி செய்துள்ளார். ஆனால் […]
